மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுத மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுத மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நாளை தொடங்க உள்ளது. இது இந்த மாதம் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் 154 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.இதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம்

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமமின்றி எழுத முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தேர்வை பெரும்பாலானோர்  ஆன்லைன் வாயிலாக எழுத வேண்டும் என்பதால் அவர்கள் கணினி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது