மாற்றுத்திறனாளி தாயைத் தூக்கிக் கொண்டு 230 கி.மீ. தூர நடைப்பயணம் மேற்கொண்ட மகன்!

 

மாற்றுத்திறனாளி தாயைத் தூக்கிக் கொண்டு 230 கி.மீ. தூர நடைப்பயணம் மேற்கொண்ட மகன்!

ஊரடங்கால் வேலை இல்லாததால் அவர்களுக்கு உணவு கூட கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட குழு, மஞ்சள் அறுவடைக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் கிராமத்துக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போதே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் திணறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஊரடங்கால் வேலை இல்லாததால் அவர்களுக்கு உணவு கூட கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. 

ttn

இதனையடுத்து 230 கி.மீ தூரம் நடந்தே சென்று விடலாம் என்று முடிவெடுத்து நடைப்பயணத்தை தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த குழுவுக்கு சமையல் செய்வதற்க்காக வந்த பெண் மாற்றுத்திறனாளியாக இருந்ததால், அவரால் அவ்வளவு தூரம் நடப்பது சாத்தியம் இல்லாதது. அதனால், அவரது மகனே அவரை தோளில் சுமந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். 
இவர்கள் வேலூர் அருகே உள்ள பொத்தனூர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது, 15 பேர் கொண்ட குழு நடந்து வந்து கொண்டிருப்பதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் நிலையை புரிந்து கொண்ட அதிகாரிகள், அவர்களுக்கு உணவு வழங்கி, வாக்கம் ஒன்றை ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.