மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை.. !

 

மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை.. !

தமிழக துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடந்த 14 ஆம் தேதி 2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை 10 ஆவது முறையாகத் தாக்கல் செய்தார்.

தமிழக துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடந்த 14 ஆம் தேதி 2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை 10 ஆவது முறையாகத் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் அறிவிப்புகளைத் தெரிவித்தார். அதன் பின்னர் சபா நாயகர் தலைமையிலான குழு, பட்ஜெட் குறித்து விவாதிக்க எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்தலாம் என்பது குறித்து விவாதித்தனர். அந்த கூட்டத்தின் முடிவில் பிப்ரவரி 17 முதல் 20 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படி, அந்த 4 நாட்கள் கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. 

ttn

நான்காம் நாள் கூட்டத்தொடரின் முடிவில், காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனையடுத்து, சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதியை அறிவிக்காமல் சபாநாயகர் தனபால் ஒத்தி வைத்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடும் என்றும் அதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளின்  மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் என்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.