மார்கழி மாத மீன ராசி பலன்கள்

 

மார்கழி மாத மீன ராசி பலன்கள்

மீன ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் மார்கழி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மீன ராசிக்கு 10ல் சூரியனும் சனியும் 12, 1ல் செவ்வாயும்  8, 9ல் சுக்கிரனும் 9, 10ல் புதனும் 9ல் குருவும் 5ல் ராகுவும்  11ல் கேதுவும் அமர்ந்துள்ளனர். மார்கழி மாதத்தில் செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.

meena rashi palnagal

மீன ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன்  மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். 

பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். சிலருக்குத் தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.

வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

meena rashi palangal

உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். சிலருக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. 

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும்.கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்குப் புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். 

ஆனால், மாதப் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களைப் பற்றிய வதந்திகளும் பரவக்கூடும்.

meena rashi palangal

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.

மீன லக்ன பலன்கள் :  குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.

பூரட்டாதி நட்சத்திரம் : குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும்.

உத்திரட்டாதி நட்சத்திரம் :  பண வரவு திருப்தி தருவதாக இருக்கும்.

ரேவதி நட்சத்திரம் :  வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை உயரும்.

சந்திராஷ்டம நாட்கள் :  டிசம்பர் 31, ஜனவரி 1 

அதிர்ஷ்ட எண்கள் : 2,5

அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் மற்றும் வியாழன் 

meena rashi palangal

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிகப்பு 

வழிபடவேண்டிய தெய்வம் : சூரியன், தட்சிணாமூர்த்தி

 பரிகாரம் : ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வது சிரமங்களைக் குறைக்கும்.