மார்கழி மாத தைலக் காப்பு உற்சவத்திற்க்கு தயாராகும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

 

மார்கழி மாத தைலக் காப்பு உற்சவத்திற்க்கு தயாராகும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் முக்கியத்துவங்கள் பற்றியும் அதன் பெருமைகள் பற்றியும் பார்போம்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் புண்ணிய ஸ்தலமாகும். ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது.

sri villi

ஆண்டாள் அவதாரத் தலமாக இருந்ததால் இப்புண்ணியத்தை பெற்றது. ஆடி மாதம் ஸ்ரீ வில்லிபுத்தூர் நகரம் தனி பெருமையைசூடிக் கொள்ளும். 

ஆண்டாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தாள். விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரியாழ்வார், நந்தவனத்தில் துளசிமாடத்தில் ஆண்டாளை குழந்தையாக எடுத்து வளர்த்து வந்தார். 

மங்கையான ஆண்டாள் கண்ணன் மீது பற்றி கொண்டு காதல் அவனையே மணவாளனாக நினைத்தாள். இறைவனுக்கு அணிவிக்க பெரியாழ்வார் தொடுத்து வைத்த மாலையை ஆண்டாள்சூடி, கிணற்றில் தன் அழகை பார்த்தாள்.

sri villi

ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையையே இறைவனும் அணிந்து கொண்டதால் சூடிக்கொடுத்த நாச்சியார் என்று பெயர் பெற்றாள்.

108 திவ்ய தேசங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள திருத்தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற வைணவத் திருத்தலங்களுக்கு இணையாக போற்றப்படுவது ஸ்ரீஆண்டாள் கோயிலின் சிறப்பம்சமாகும். 

ஸ்ரீஆண்டாளின் திருப்பாவையில்லாமல் எந்தவொரு திவ்ய தேசத்திலும் பூஜைகள் நடைபெறுவது கிடையாது என்பது ஸ்ரீஆண்டாளின் தனிச்சிறப்பிற்கு ஒரு வரலாற்று சான்றாகும்.

sri villi

எல்லாவற்றிற்கும் ஸ்ரீ ஆண்டாள் முதன்மை பெற்று பெருமாளுக்கு இணையான அந்தஸ்து பெற்றிருப்பதும், தேரோட்டத்தில் ஸ்ரீரெங்கமன்னாருடன் பவனி வந்து அருள்பாலிப்பதும் உலகெங்கும் காணமுடியாத ஒரு வைபவமாகும்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் திருக்கோயிலில் மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. 

நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர்.இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். 

sri

மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.

தமிழ்நாடு அரசு ஸ்ரீஆண்டாள் கோயிலின் இராஜகோபுரத்தினை முத்திரையாக கொண்டிருப்பதும், பெரிய பெருமாள் என்னும் ஸ்ரீவடபத்ரசயனர் பெருமாளாக எழுந்தருளுவதும்,

ஆழ்வார் பெருமக்களில் ஸ்ரீமன் நாராயணனுக்கு பல்லாண்டு பாசுரம் பாடிய பெரியழ்வார் என்று போற்றப்படும் ஸ்ரீவிஷ்ணு சித்தர் திருவாய்மொழி இயற்றியதும், பெரியகுளம் என்று அழைக்கப்படும் திருமுக்குளம் அமைக்கப்பட்டு இருப்பதும் இத்திருத்தலத்தின் தனிச்சிறப்புகள். 

sri andaal

இத்திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்ததூர் பெரிய தேர் என்னும் ஒரு வரலாற்றுச் சிறப்பினையும் பெற்றுள்ளது. தட்டொளி, கண்ணாடிக் கிணறு, மாதவிப்பந்தல், கல்வெட்டுக்கள், கவினுறு சிற்பங்கள், கட்டட கலைகள், கண்கவர் ஓவியங்கள் என்று பலவற்றாலும் புகழ் பெற்றுள்ளது இத்திருக்கோயிலின் திருத்தேர்.

தூய தமிழில் திருப்பாவை, திரு மொழி பாடல்களை தமிழக்கு இலக்கணமாகத் தந்தருளிய ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ளார் என்பது நாம் செய்த பாக்கியமே. 

sri aandaal

திருப்பாவை பாசுரங்கள் அத்தனையும் தூய்மையான, ஆழமான பக்தி நிறைந்தவை. நாச்சியார் திருமொழியோ கற்பனை வளம் நிறைந்து காணப்படுகிறது.

உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் பெண்களுக்கென்று ஒரு பக்தி இலக்கிய நூல் இருக்குமானால் அது ஆண்டாள் தொடுத்த திருப்பாவை ஒன்று தான். 

தமிழ் பேசத் தெரியாத வடமொழி மாநிலங்களிலும்,நேபாளம், கர்நாடகா, ஆந்திரா மாநில வைணவ கோயில்களில், வழிபாட்டின் போது தமிழ் உச்சரிப்பு மாறாமல் இந்த திருப்பாவை சொல்லப்படுகிறது.