மார்கழி மாத சிம்ம ராசி பலன்கள்

 

மார்கழி மாத சிம்ம ராசி பலன்கள்

சிம்ம ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் மார்கழி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

சிம்ம ராசிக்கு 5ல் சூரியனும்,சனியும் 7, 8-ல் செவ்வாயும்  3, 4-ல் சுக்கிரனும், 4, 5-ல் புதனும், 4-ல் குருவும், 12-ல் ராகுவும்  6-ல் கேதுவும் சஞ்சாரம் செய்கின்றனர். மார்கழி மாதத்தில் செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.

siva

சிம்ம ராசிக்காரர்களுக்கு வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். 

மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆண்களுக்குப் பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  

simmam

தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. அலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். 

எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது.

மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். கலைத்துறையைச் சேர்ந்த ஆண் கலைஞர்களுக்கு பெண் கலைஞர்களாலும், பெண் கலைஞர்களுக்கு ஆண் கலைஞர்களாலும் நன்மைகள் ஏற்படச் சாத்தியம் உள்ளது.

simmam

மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குச் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

 

சிம்ம லக்ன பலன்கள்: வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.

மகம் நட்சத்திரம் : எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

பூரம் நட்சத்திரம் :  நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரம் : சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சந்திராஷ்டம நாட்கள் :  டிசம்பர் 16,17, ஜனவரி 12,13

அதிர்ஷ்ட எண்கள் : 4,6 

simmam

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு,செவ்வாய்,வியாழன் 

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, மஞ்சள் 

வழிபடவேண்டிய தெய்வம் : சிவன், ஆண்டாள் 

பரிகாரம் : விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மைகளைத் தரும்.  

மேலும் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் உத்தமமான பரிகாரம் ஆகும்.