மார்கழி மாத கும்ப ராசி பலன்கள்

 

மார்கழி மாத கும்ப ராசி பலன்கள்

கும்ப ராசிக்கு ஜோதிட அடிப்படையில் மார்கழி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

கும்ப ராசிக்கு 11ல்சூரியனும் சனியும் 1, 2ல் செவ்வாயும்  9, 10ல் சுக்கிரனும் 10, 11ல் புதனும்  10ல் குருவும் 6ல் ராகுவும் 12ல் கேதுவும் அமர்ந்துள்ளனர். மார்கழி மாதத்தில் செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.

கும்ப ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 

kumba rashi palangal

எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். 

அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். 
தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 

வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு உங்களைப் பற்றிய வதந்திகள் பரவினாலும், பொருட்படுத்தாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

kumba rashi palangal

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 

கும்ப லக்ன பலன்கள் :  அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.

அவிட்டம் நட்சத்திரம் : பணவரவு கணிசமாக உயரும்.

சதயம் நட்சத்திரம் :  தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரம் :  வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

சந்திராஷ்டம நாட்கள் :  டிசம்பர் 29,30

அதிர்ஷ்ட எண்கள் : 1,2,7

kumbha rashi palangal

அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள் மற்றும் வெள்ளி 

அதிர்ஷ்ட நிறம் : நீலம் 

வழிபடவேண்டிய தெய்வம் : துர்க்கை, முருகப்பெருமான்.

பரிகாரம் : செவ்வாயன்று கேதுவுக்கு அர்ச்சனை செய்வதும் வெள்ளியன்று துர்க்கை வழிபாடு செய்வதும் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வதும் மிகுந்த நன்மையை தரும்.