மார்கழி மாதத்தின் சிறப்புகளும் விசேஷ தினங்களும் !

 

மார்கழி மாதத்தின் சிறப்புகளும் விசேஷ தினங்களும் !

மார்கழி மாதத்தின் சிறப்புகளை பற்றியும் அந்த மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளின் விளக்கங்கள் பற்றியும் பார்போம்.

மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோயில்களில் வழிபாடுகள் போன்றவைதான்.

margali

மார்கழிதான் மனித உடம்பில் சமநிலையையும் ஸ்திரத் தன்மையையும் கொண்டு வருவதற்கு உசிதமான நேரம் ஆகும். இதற்கான பிரத்தியேகமான யோகப் பயிற்சிகள் நமது கலாச்சாரத்தில் வடிவமைக்கப்பட்டு சொல்லி இருக்கின்றர்கள் நம் முன்னோர்கள்.

மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். இறைவன் விழித்தெழும் சமயம் என்பதால் தேவர்கள் முன்கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்யத் தயாராகும் காலம் இதுவாகும்.

அந்த சமயத்தில் சுவாமியை புகழ்ந்து பாடி வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம் நோய் நீக்கி குடும்பத்தில் செல்வத்தை பெருக வைப்பர் என்பது ஐதிகம்.

margali

அதனால்தான் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் கடவுள் திருநாமங்களைச் சொல்லி பஜனை செய்திடும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள் நம் முன்னோர்கள் .

ஆண் தன்மை நிலத்தோடு சம்பந்தமுள்ளதாகவும், பெண் தன்மையானது ஒரு பொருளின் வர்ணம் மற்றும் வெளிப்புற வடிவத்தின் மீதுதான் ஈர்ப்புடையதாகவும் இருக்கும்.

அதனால் தான் மார்கழி மாதம் பெண்கள் அதிகாலையில் வீடுகளின் முன்பு கோலம் போடுவதை தங்களது கடமைகளில் ஒன்றாக கருதுகின்றனர்.

margali

நம் உடலை நாம் பாதுகாக்கத் தவறினால் உடம்பின் நீராதார சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு அது மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாரம்பரியமாக இம்மாதத்தில் நீரோடு தொடர்புடைய சில பயிற்சிகளை மேற்கொள்கிறோம்.

இதற்காக நாம் பிரம்ம முகூர்த்தத்தை காலை 3.40 மணி முதல் 5.30 மணி வரை உள்ள நேரத்தினை தவற விடுவதில்லை. இதற்கான எளிதான பயிற்சி என்னவெனில் கோயில் தெப்பக்குளத்தில் அந்த பிரம்ம முகூர்த்தத்தில் மூழ்கி நீராடுவது தான்.

தமிழ் கால கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் நிகழ்வையே மார்கழி மாதமாக கருதப்படுகிறது.

hanuman

மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. 

திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் அதிகாலையில் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டு ஆலயங்களுக்கு செல்வர். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.

aandaal

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மார்கழி மாதத்தில் தான் மார்கழி திருவாதிரை விரதமும்,ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

padi

அதனையடுத்து இம்மாதத்தில்  வைகுண்ட ஏகாதசி, அனும ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.