மார்கட் ராபியின் முதல் ஹார்லி க்வின் லுக் இணையத்தில் வெளியானது

 

மார்கட் ராபியின் முதல் ஹார்லி க்வின் லுக் இணையத்தில் வெளியானது

பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி முதன்முறையாக ஹார்லி க்வின் கதாபாத்திரத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி முதன்முறையாக ஹார்லி க்வின் கதாபாத்திரத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

டிசி எக்ஸ்டன்டட் ஃபிலிம் யுனிவர்ஸ் திரைப்படத் தொடரில் ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ படம் சமீபத்தில் வெளியானது. பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் திரைக்கு வெளியான முதல் வாரத்தில் குறைந்த வசூலை பெற்று, இந்த திரைப்படத் தொடரிலேயே மிகவும் குறைவான முதல் வார கலெக்ஷனை பெற்ற படமாக ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ மாறியுள்ளது. சுமார் ரூ.700 கோடிக்கும் அதிகமான வசூலை இந்தப் படம் முதல் வாரத்தில் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.578 கோடி வசூலை மட்டுமே இந்தப் படம் முதல் வாரத்தில் வசூலித்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The Suicide Squad 2 ❤️? #MargotRobbie #Harleyquinn #SuicideSquad

A post shared by margot robbie (@allaboutmargot) on

அந்த வகையில், இந்த திரைப்பட தொடரில் குறைவான முதல் வார கலெக்ஷனை பெற்றதாக கருதப்படும் ‘ஷசாம்’ படத்தின் வசூலை விட (ரூ.1132 கோடி) ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ மிகக் குறைவான வசூலை பெற்றுள்ளது. இந்த நிலையில், ஹார்லி க்வின் கதாபாத்திரத்தில் மார்கட் ராபி முதன் முறையாக நடித்தபோது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Imágenes de MargotRobbie como #HarleyQuinn en el set de la secuela #TheSuicideSquad ??

A post shared by Cinema Show (@cinemashownews) on

2016-ஆம் ஆண்டு வெளியான சூசைட் ஸ்க்வாட் படத்தில் முதன்முறையாக ஹார்லி க்வின் கதாபாத்திரத்தில் மார்கட் ராபி நடித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது.