மாமனிதன் விஜய் சேதுபதி! இப்போ சங்கத்தமிழன் ஆகிட்டார்!

 

மாமனிதன் விஜய் சேதுபதி! இப்போ சங்கத்தமிழன் ஆகிட்டார்!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் 30வது படத்துக்குச் சங்க தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் 30வது படத்துக்குச் சங்க தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அதைத்தொடர்ந்து மாமனிதன்,சிந்துபாத் என அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.அந்த வரிசையில் விஜயா புரடொக்சன்ஸ் தயாரிப்பில்  ‘ஸ்கெட்ச்’ பட இயக்குநர் விஜய் சந்தருடன் இணைந்து தனது 30வது படத்தில் நடித்து வருகிறார்.

vijaysethupathi

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். மேலும் இதில் சூரி, மொட்டை ராஜேந்திரன், நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், படத்திற்கு சங்கத் தமிழன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகச் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஐரா திரைப்பட ஸ்னீக் பீக்: மரண பீதியில் நயன்தாரா!