மாபெரும் ஹிட்டடித்த பேய் படத்தின் 2ம் பாகம் வருகிறது…!

 

மாபெரும் ஹிட்டடித்த பேய் படத்தின் 2ம் பாகம் வருகிறது…!

சென்னை: படம் பார்த்தவர்களை மிரள வைத்த படமான மாதவனின் “யாவரும் நலம்” படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

சென்னை: படம் பார்த்தவர்களை மிரள வைத்த படமான மாதவனின் “யாவரும் நலம்” படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

யாவரும் நலம், வேட்டை ஆகிய படங்களில் நடித்த மாதவன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி  கொடுத்தவர். அப்படம் வேறு ஒரு மாதவனை நமக்கு காட்டியது.

இதற்கடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த விக்ரம் வேதாபடம் மாதவனுக்கு நல்லதொரு பெயரை கொடுத்தது. தற்போது மாதவன், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதையில் இயக்கி, நடித்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு வெளியான “யாவரும் நலம்” படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த தகவலை மாதவன் உறுதிப்படுத்தியுள்ளார். விக்ரம் குமார் இயக்கிய இந்த படம் வித்தியாசமான பேய் படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பேய் பட ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தது இந்த படம் தான் என்று கூட சொல்லலாம்.

yaavarum nalam

முதல்பாகம் கொடுத்த பயத்தை, த்ரிலிங்கை இரண்டாம் பாகம் கொடுக்குமா என்று படம் வெளியான பிறகு தெரியும். வெயிட்டிங் “யாவரும் நலம் 2”..!