மான் வேட்டை வழக்கில் நாளை விசாரணை! சிக்கலில் பாலிவுட் நடிகர், நடிகைகள்

 

மான் வேட்டை வழக்கில் நாளை விசாரணை! சிக்கலில் பாலிவுட் நடிகர், நடிகைகள்

மான் வேட்டை வழக்கில் பாலிவுட் நட்சத்திரங்கள் சயீப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் விடுவிக்கப்பட்தை எதிர்த்து ராஜஸ்தான் அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.

1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே உள்ள வனப்பகுதியில் ப்ளாக் பக் எனப்படும் அரிய வகை மான்கனை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான் மற்றும் நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சல்மானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதேசமயம் சயீப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே மற்றும் நீலம் ஆகியோரை அந்த வழக்கிலிருந்து விடுவித்தது.

ப்ளாக்பக் எனப்படும் அரியவகை மான்

மான்வேட்டை வழக்கிலிருந்து சயீப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோரை கீழ் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணை நவம்பர் 27ம் தேதி (நாளை) நடைபெறும் அறிவித்தது.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்

மான் வேட்டை வழக்கில் இருந்து தப்பித்தோம் என்று நிம்மதியாக இருந்த சயீப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோருக்கு தற்போது ராஜஸ்தான் அரசின் மேல்முறையீட்டு மனு பெரும் தலைவலியாக உருவாகியுள்ளது. மான் வேட்டை வழக்கில் தண்டனை பெற்ற சல்மான் கான் தற்போது பெயில் வெளியே உள்ளார்.