மாதவிடாயின் போது கிச்சனில் நுழைந்த மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை!.

 

மாதவிடாயின் போது கிச்சனில் நுழைந்த மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை!.

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் பகுதியில் இயங்கிவருகிறது ‘ஸ்ரீ சகஜானந்தா பெண்கள் தொழிற்பயிற்சி மையம்’. சுவாமி நாராயணன் கோவில் டிரஸ்ட் மூலம் இது நிர்வகிக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் பல மூடத்தனமான வழக்கங்கள் எழுதாத சட்டங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன.அவற்றில் முக்கியமானவை,இங்கு பயிலும் மாணவிகள் மாதவிடாய் காலத்தில் சக மாணவிகளுடன் தொட்டு பழகுவதும், ஒன்றாக அமர்ந்து உண்ணுவதும் இங்கு தடைசெய்யப்பட்டு இருக்கிறது.

shree-sahajanand

சமீபகாலமாக சில மாணவிகள் இதை மீறி இருக்கிறார்கள். இதுகுறித்து  வார்டன் நிர்வாகத்துக்கு தகவல் தந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் தலைமையில், அங்கு தங்கி இருந்த 68 மாணவிகளையும் வரிசையாக கழிவறைக்கு அழைத்துபோய்,அவர்களது உள்ளாடைகளை களைந்து சோதனை செய்திருக்கிறார்கள். இது குறித்து மாணவிகள் யாரும் புகார் அளிக்காதபோதும் இந்த இழி செயல் வெளிப்பட்டு விட்டது.
போலீசார் ஒரு பெண் ஆய்வாளர் தலைமையிலான குழுவை நியமித்து விசாரணையைத் துவக்கி இருக்கிறார்கள்.இந்தக் கல்லூரியுடன் இணைந்த கிராந்தி குரு ஷியாம்ஜி கிருஷ்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தர்ஷனா லோகியா ‘ மாதவிடாய் ஏற்பட்டுள்ள மாணவிகள் மற்ற மாணவிகளுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது,என்று கட்டுப்பாடு உள்ளது,இதை மீறிய சில மாணவிகளை குறித்த புகார் எழுந்த போது,சிலமாணவிகள் தாங்களாகவே முன்வந்து ஒரு பெண் ஊழியர் தங்களை சோதனையிட அனுமதித்தனர்.விதியை மீறியவர்களை நிர்வாகம் மண்ணித்து விட்டது.குஜராத் மகளிர் வாரியம் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறது. இருபத்தொன்றாம் நூறாண்டிலும் இப்படிபட்ட கல்வி நிறுவனங்கள் இருப்பது இந்தியாவுக்கு அவமானம் இல்லையா.