மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றும் 2 ஊழியர்களுக்கு கொரோனா! பணியாளர்கள் வேலைக்கு வராததால் நாளை பால் வராது?

 

மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றும் 2 ஊழியர்களுக்கு கொரோனா! பணியாளர்கள் வேலைக்கு வராததால் நாளை பால் வராது?

மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணியாற்றும் 2 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட் ஏற்றும் ஊழியர்கள் சிலர் பணிக்கு வரவில்லை.

மாதவரம் ஆவின் பால் பண்ணை மூலம் சென்னை முழுவதும் நாள் ஒன்றுக்கு  2 லட்சத்து 38 ஆயிரம் பால்பாக்கெட் விநியோகம் செய்து வருகிறது. தற்போது வரை 14 லாரிகளில் மட்டுமே பால் பாக்கெட் ஏற்றியுள்ளனர். 20 லாரிகளில் இன்னும் பால் சப்ளை ஏற்றவில்லை. பணியாளர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஊழியர்கள் அச்சத்தின் காரணமாக பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.500க்கும் மேற்பட்ட பணியாற்றி வரும் இந்த நிறுவனத்தில், கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் பேக்கிங் செக்சனில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதால், மற்ற ஊழியர்கள் வேலைக்கு வர மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

 மாதவரம் பால்பண்ணை

இன்று 2 லட்சம் பாக்கெட் லோடு செய்யவில்லை எனில் நாளை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூரில் இருந்து பால் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆவின் பால் நிர்வாகம் தெரிவித்துள்ளது.