மாணவி தற்கொலை! திருச்சி கல்லூரியில் தொடரும் போராட்டம்!

 

மாணவி தற்கொலை! திருச்சி கல்லூரியில் தொடரும் போராட்டம்!

சென்னையில் ஐஐடி மாணவி பாத்திமாவின் தற்கொலை மாணவர்களிடையே பரபரப்பை கிளப்பியது. மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு கேரளாவின் பல பகுதிகளில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் நடைப்பெற்று வரும் போராட்டம் தமிழகத்திலும் பரவ வாய்ப்பிருப்பதாக போலீசார் அஞ்சிய நிலையில், நேற்று திடீரென ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் ஐஐடி மாணவி பாத்திமாவின் தற்கொலை மாணவர்களிடையே பரபரப்பை கிளப்பியது. மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு கேரளாவின் பல பகுதிகளில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் நடைப்பெற்று வரும் போராட்டம் தமிழகத்திலும் பரவ வாய்ப்பிருப்பதாக போலீசார் அஞ்சிய நிலையில், நேற்று திடீரென ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை ஐஐடி நிர்வாகம் சுமூகமாக பேசி நீர்த்துப் போக செய்தது. இந்நிலையில், திருச்சி கல்லூரி விடுதியில் தற்கொலைச் செய்துக் கொண்ட மாணவியின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி அய்மான் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

jabera praveen

திருச்சி அய்மான் கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஜாப்ரா பர்வீன். 18 வயதான இந்த மாணவி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரியின் விடுதி அறையில் தங்கி, ஊட்டச்சத்து பிரிவில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர், கல்லூரி விடுதியின் அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மாணவி பர்வீனின் தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம் தான் காரணம் எனக்கூறி சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவியர் கல்லூரியின் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கல்லூரி மாணவிகளின் இந்த உள்ளிருப்பு போராட்டத்தினால் செய்வதறியாது கல்லூரி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து திருச்சி கே.கே. நகர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர், மாணவியின் தற்கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.