மாணவிகள் பள்ளி செல்ல வேன் வாங்கித்தந்த ஊராட்சித் தலைவர்! – குவியும் பாராட்டுக்கள்

 

மாணவிகள் பள்ளி செல்ல வேன் வாங்கித்தந்த ஊராட்சித் தலைவர்! – குவியும் பாராட்டுக்கள்

கும்மிடிப்பூண்டி அருகே தன்னுடைய கிராமத்தில் உள்ள மாணவிகள் பள்ளிக்கு சென்று வர வசதியாக வேன் வாங்கித்தந்த ஊராட்சித் தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கும்மிடிப்பூண்டி அருகே தன்னுடைய கிராமத்தில் உள்ள மாணவிகள் பள்ளிக்கு சென்று வர வசதியாக வேன் வாங்கித்தந்த ஊராட்சித் தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தில் மூன்றரை ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் ஊரக ஊராட்சித் தேர்தல் நடந்தது. இதில் பல முறைகேடுகள் நடந்தது என்ற குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருந்தாலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் கிராமங்களுக்கு நடந்துவரும் நல்ல விஷயங்கள் பற்றிய செய்தியும் அதிக அளவில் வந்துகொண்டே இருக்கிறது.

president-anandraj

அந்த வகையில் கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சித் தலைவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ஆனந்தராஜ் போட்டியிட்டுள்ளார். எல்லோரும் கூறுவதுபோல் நான் வெற்றிபெற்றால் கிராத்துக்கு நல்லது செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார். வெற்றிபெற்றதும் இவர் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவும் தொடங்கியுள்ளார். 
முதலில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் மேல்நிலைக் கல்விக்கு ஐந்து கி.மீ தொலைவில் உள்ள கவரப்பேட்டை செல்ல வேண்டி உள்ளதையும் சென்று வர பஸ் வசதி இன்றி அவதிப்படுவதையும் கண்டுள்ளார். குறிப்பாக மாணவிகள் அதிக அளவில் பஸ் வசதி இல்லாததால் அவதியுறுவதையும் இதனால் பல பெண்கள் படிக்க முடியாமல் இருப்பதையும் கண்டார். இதனால், தன்னுடைய சொந்த செலவில் வேன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் டிரைவருக்கான சம்பளத்தை தன்னுடைய தானே தருவதாகவும் கூறியுள்ளார். இந்த ஊராட்சித் தலைவருக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.