மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… தலைமையாசிரியரை முற்றுகையிட்ட பெற்றோர்கள்! ஓடி வந்து காப்பாற்றிய போலீசார்! 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… தலைமையாசிரியரை முற்றுகையிட்ட பெற்றோர்கள்! ஓடி வந்து காப்பாற்றிய போலீசார்! 

வேலியே பயிரை மேய்கிற கதைகள் தான் பெரும்பாலான கல்வி நிலையங்களில் இன்னமும் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. மாதா, பிதாவிற்கு அடுத்த நிலையில் குருவை வைத்து வணங்கி வரும் மாணவர்கள் இன்றும் தமிழகம் முழுக்கவே இருக்கிறார்கள். இந்நிலையில், தன் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் செக்ஸ் தொல்லைகள் கொடுத்து வந்த தலைமையாசிரியர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிற சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

dharmapuri

தர்மபுரி மாவட்டத்தில், ஏரியூரை அடுத்துள்ள பூச்சூரில் அரசினர் உயர் நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்தப் பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மீது ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்று சேர்ந்து, தங்களிடம் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

subramani

தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பூச்சூர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், பள்ளியில் படிக்கும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளைத் தலைமை ஆசிரியர் அறைக்கு தனியாக அழைத்து, மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக, மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் அழுதப்படியே புகார் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள், இன்று பள்ளியை ஒன்று சேர்ந்து முற்றுகையிட்டனர். இச்சம்பவம் பற்றி தெரிந்துக் கொண்ட ஏரியூர் போலீசார், விரைந்து வந்து தலைமை ஆசிரியரை மீட்டு, அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, தலைமை ஆசிரியர் சுப்பிரமணியை பத்திரமாக ஏரியூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 
பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகாரை அடுத்து, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சுரேஷிடம் காவல்துறை புகார் மனுவைப் பெற்றுள்ளது. அந்தப் புகார் மனுவில், பள்ளி மாணவிகளின் ரிக்கார்டு நோட்டுகளைப் பார்ப்பதாகத் தலைமை ஆசிரியர் அறைக்கு மாணவிகளைத் தனியே வரவழைத்து, தோள்மீது கை வைத்துக் கொண்டு முதுகைச் சுரண்டுவது, கட்டிப்பிடிப்பது போன்ற தவறான செயல்களைச் செய்துள்ளார். இவை அனைத்துமே, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்லிக் கொடுத்த குட் டச், பேட் டச் விதிமுறைகளை மீறி பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி நடந்து கொண்டதாகவும், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான சங்கடத்தை ஏற்படுத்திய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

school

ஆசிரியர் சுரேஷ் கொடுத்துள்ள புகார் மனுவின் அடிப்படையில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியிடம் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லதா, ஏரியூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல தர்மபுரி மாவட்ட கல்வி அதிகாரி டிஇஒ பாலசுப்பரமணியும், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணி குற்றம் செய்தது உண்மை எனத் தெரியவந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.