மாணவர்களின் வருகைப்பற்றி பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்..ஜனவரிமுதல் அமல் !

 

மாணவர்களின் வருகைப்பற்றி பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்..ஜனவரிமுதல் அமல் !

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் முழு விவரங்களையும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் முழு விவரங்களையும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன் படி, மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர்களின் வருகைப் பதிவுகள் குறித்து ஆசிரியர்கள் தனியாக வருகை பதிவேடு வைத்திருந்தாலும், இணைய தளத்திலும் அதனைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ttn

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் சுமார் 69 லட்சம் மாணவர்களின் வருகைப் பதிவு குறித்து அவர்களது பெற்றோர்களுக்குக் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்பும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. இதனால், மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்ணை வாங்கி, அது அவர்களுடைய எண் தானா என்று சரிபார்த்து இணையதளத்தில் பதிவேற்றும் படி உத்தரவிட்டது. தற்போது அந்த பணிகள் ஓரளவு நிறைவடைந்த நிலையில், சில பள்ளிகளில் அதனைச் செயல்படுத்தி சோதனை செய்தது. அது சிறப்பாக முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ttn

அதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருக்கைப்பற்றிப் பெற்றோர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் திட்டத்தை அடுத்த மாதம் மூலம் அமல்படுத்த உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம், மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலும், வரவில்லையென்றாலும் பெற்றோர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.