மாணவர்களிடம் கல்வி மற்றும் பஸ் கட்டணம் வசூலிக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை

 

மாணவர்களிடம் கல்வி மற்றும் பஸ் கட்டணம் வசூலிக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை

காஷ்மீரில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளும், கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நாட்களுக்கு மாணவர்களிடம் கல்வி மற்றும் பஸ் கட்டணம் வசூலிக்க கூடாது என காஷ்மீர் டிவிஷனல் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடக்கத்தில் சில நாட்கள் மக்கள வீட்டுக்குள் முடங்கி  கிடந்தனர். பின்னர் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்ப தொடங்கியது. பல பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் பள்ளிகள் சரிவர இயங்காமல் இருந்தது.

பள்ளி

இந்நிலையில், மேல்நிலை வரையிலான பள்ளிகள் வரும் அக்டோபர் 3ம் தேதியன்றும், கல்லூரிகள் வரும் 9ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக திறக்கப்படும் என ஜம்மு அண்டு காஷ்மீர் தகவல் மற்றும் பொது தொடர்பு துறை அறிவித்துள்ளது. 

மாணவிகள்

இதுதவிர,  காஷ்மீரில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளும், கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நாட்களுக்கு மாணவர்களிடம் கல்வி மற்றும் பஸ் கட்டணம் வசூலிக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி கல்வி துணை கமிஷனர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு காஷ்மீர் டிவிஷனல் ஆணையர் பசீர் அகமது கான் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.