மாட்டிறைச்சி விற்றதாக இஸ்லாமிய முதியவரை தாக்கிய கொடூர கும்பல்; அசாமில் அதிர்ச்சி!

 

மாட்டிறைச்சி விற்றதாக இஸ்லாமிய முதியவரை தாக்கிய கொடூர கும்பல்; அசாமில் அதிர்ச்சி!

சவுகத் அலியிடம் மட்டும் இதுபோன்று நடந்து கொள்ளவில்லை. மற்றொரு மாற்று சமூகத்தை சேர்ந்தவரிடமும் இது போன்று தவறாக நடந்துள்ளது

கவுகாத்தி: மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி இஸ்லாமிய முதியவர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவ அசாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் பிஸ்வனாத் பகுதியில் 68 வயதான சவுகத் அலி என்பவர் மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி உள்ளூர் கும்பல் ஒன்று அவரை கொடூரமாக தாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cow slaughter

அந்த வீடியோவில், உடல் முழுவதும் சகதியுடன், முட்டிக்கால் போடப்பட்டு கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் தன்னை விட்டு விடுமாறு சவுகத் அலி கெஞ்சுகிறார். ஆனால், அவரிடம் மாட்டிறைச்சி விற்க உரிமம் உள்ளதா? வங்கதேசத்தை சேர்ந்தவரா? குடிமக்கள் பற்றிய தேசிய பதிவேட்டில் அவரது பெயர் இருக்கிறதா? என அந்த கும்பல் கேள்வி கேட்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சவுகத் அலி பன்றிக்கறி சாப்பிட வைத்தும் அந்த கும்பல் கொடுமை படுத்தியுள்ளது.

வெளிநாட்டவர்களை அடையாளம் காணும் பொருட்டு, அசாமில் தற்போது, குடிமக்கள் பற்றிய தேசிய பதிவேடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

cow slaughter.

இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது மத ரீதியான பிரச்னை இல்லை. இந்த கும்பல் சவுகத் அலியிடம் மட்டும் இதுபோன்று நடந்து கொள்ளவில்லை. மற்றொரு மாற்று சமூகத்தை சேர்ந்தவரிடமும் இது போன்று தவறாக நடந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

lynching

கடந்த சில ஆண்டுகளாக பசு பாதுகாப்பு என்ற பெயரில் வட மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதும், கொல்லப்படுவதும் அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

மிரட்டும் எபோலா; காங்கோவில் 655 பேர் பலி!