மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

 

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

ராமேஸ்வரம் மற்றும் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நீர்நிலைகளில் பக்தர்கள் மஹாளய அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்  .

மஹாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்களான ராமேஸ்வரம், திருச்செந்தூர், ஸ்ரீ ரங்கம்   அம்மா மண்டபம்,  திருவெண்காடு, திருவள்ளூர், திருவாலங்காடு, திருவிடைமருதூர், திருநள்ளாறு, வேதாரண்யம், கோடியக்கரை, சேதுக்கரை, ஆகிய கோயில்களில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து தங்களது முன்னோர்களை வாழிபாடு செய்தனர் .

tharpanam

 ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் ஆடி அமாவாசை,தை அமாவாசை,புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.அதனையடுத்து  இன்றையதினம் மஹாளய அமாவாசையொட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். அதிகாலையில் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். இதன் பின் கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி மற்றும் அம்பாளையும் தரிசனம் செய்தனர்.

tharpamgn

திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோயிலிலும் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.அதேபோல ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் இன்று அதிகாலை முதல் ஏராளமானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையையொட்டி அம்மாமண்டப படித்துறையில் ஏராளமானோர் குவியத் தொடங்கினர். 

rameswramghj

காவிரி புனித நீராடிய பக்தர்கள் படித்துறையில் புரோகிதார்கள் முன்பு அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், கோடியக்கரை கடலில் இன்றையதினம் புனித நீராடிய பொதுமக்கள், அங்குள்ள கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோயிலிலும் ஏரளாமான பக்தர்கள் புனித நீராடியும் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வழிபாடு செய்தனர்.