மஹாராஷ்டிராவில் கடந்த 3 ஆண்டுகளில் 12, 000 விவசாயிகள் தற்கொலை!

மஹாராஷ்டிராவில் கடந்த 3 ஆண்டுகளில் 12, 000 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்டிரா மாநிலத்தில்  ஏற்பட்ட கடுமையான வறட்சியால் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 12,021 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில்  ஏற்பட்ட கடுமையான வறட்சியால் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 12,021 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் குறித்து சட்டப்பேரவையில் பேசிய நிவாரண மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் சுபாஷ், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சுமார் 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இதில் 6,888 பேர் மத்திய அரசு வழங்கும் நிவாரண தொகையை பெற தகுதியுடையவர்களாவர்.  தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 6,845 பேருக்கு அம்மாநில அரசு நிவாரண தொகையாக ஒரு லட்சம் வழங்கியதையும் சுபாஷ் சுட்டிக்காட்டினார். 

2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மட்டும் 610 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு விவசாயிகள் தற்கொலை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.