மழை பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனைக் கூட்டம் !

 

மழை பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனைக் கூட்டம் !

தமிழகத்தில் பருவமழை தாக்கத்தின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பருவமழை தாக்கத்தின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  இதனால், தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட வரதா புயல், கஜா புயல், சென்னை வெள்ளம் போன்றவை மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. மீண்டும் இத்தகைய சீற்றங்கள் ஏற்பட்டால் அதிலிருந்து மக்களைக் காக்க முன்கூட்டியே போர்க்கால நடவடிக்கையைத் தமிழக எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தெரிவித்தனர். 

ttn

மழை பாதிப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரண்டு முறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மூன்றாவது முறையாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில், துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த கூட்டத்தில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பினால் அதனை உடைத்து மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் எவ்வாறு காப்பது என்பது குறித்தும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கோவையில் வீடு இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததைக் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.