மழையை நிறுத்த தவளைக்கு டைவர்ஸ்… விநோத சம்பவம்!

மழையை நிறுத்த தவளைக்கு டைவர்ஸ்… விநோத சம்பவம்!

பருவ மாற்றங்களினால் சென்ற கோடை நாடு முழுக்கவே ஒரு உலுக்கு உலுக்கியெடுத்துச் சென்றது. தண்ணீர் சிக்கனம் பற்றி எல்லோருமே பரபரப்பாக விவாதங்களை நடத்திய காலம் அது. நம்மூரில் கூட பெரிய பெரிய அண்டாக்களில் புரோகிதர்களும், வேத விற்பன்னர்களும் கழுத்தளவு தண்ணீரில் உட்கார்ந்து கொண்டு மொபை ஆஃப் மூலமாக மந்திரங்களைச் சொல்லி மழை வேண்டி யாகங்களை நடத்தினார்கள். நம்மூரில் நடத்திய யாகத்தைப் போலவே மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட வறட்சிக் காரணமாக மழை வேண்டி, போபால் மக்கள் ஒரு விநோதமான முடிவெடுத்தார்கள்.

mahadev temple

frog

அந்த ஊரில் உள்ள மகாதேவ் கோயிலில் தவளைக்கும் தவளைக்கும் திருமணம் நடத்தி வைத்தார்கள். இப்படிச் செய்தால் மழை வரும் என்று காலகாலமாக இருந்து வருகிற அந்த ஊர் மக்களின் நம்பிக்கை. இச்சம்பவத்தினாலேயே மாநிலத்திலும், தலைநகரிலும் நல்ல மழை பெய்து வருகிறது என மக்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதால், மக்கள் தண்ணீரில் சிக்கித் தவித்து வந்தனர். 

frog

இந்நிலையில், இதென்னடா வம்பா போச்சு, ரொம்ப ரகளை செய்ற தவளைகளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டோம் போல  என்று யோசித்த ஓம் சிவசக்தி சேவா மண்டல அமைப்பினர், தற்போது மழை நிற்க வேண்டும் என்பதற்காக இந்திரபுரியில் உள்ள மகாதேவ் கோயிலில் திருமணம் நடைபெற்ற தவளைகளுக்கு விவகாரத்து செய்து வைத்தனர். இந்த தவளைகளைப் பிரிக்கும் சடங்கு முழு சட்ட நடைமுறைகளுடன் மக்கள் முன்னிலையில் நடைபெற்றதாகச் சொல்கிறார்கள்… அதே தவளைகளை எப்படி தேடி கண்டு பிடிச்சிருப்பாங்கன்னு எல்லாம் கேட்கக் கூடாது!