மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்காத 69,490 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ்!

 

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்காத 69,490 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ்!

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69,490 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சென்னை: சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69,490 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

வரலாறு காணாத  அளவிற்கு இம்முறை தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. மேலும்  தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில், மழைநீர் சேகரிப்பு என்பது அவசியமானதாக மாறியுள்ளது. இதைப் பலரும் உணர்ந்து மழைநீரைச் சேமிக்கும் பணியை முன்னெடுத்துள்ளனர். 

water

இதனால் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாக  நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் வேலுமணி, ‘வடகிழக்கு பருவமழையின்போதே  மழைநீரைச்  சேமிப்பது என்பது அவசியமாகும். அதனால் 3 மாதங்களுக்குள் வீடு, தொழிற்சாலைகள், நிறுவனங்கள்,வணிக வளாகங்கள்  என அனைத்திலும் மழைநீர் சேமிப்பை நிறுவ வேண்டும். அப்படி மழைநீர் சேமிப்பை அமைக்காவிடில் தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’ என்றார். 

velu

இந்நிலையில் சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69,490 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 38,507 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பைச் சீரமைக்க அதன் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் கெடு விதித்துள்ள மாநகராட்சி தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.