மழைக்கு பயந்து ஒதுங்கிய இடத்தில் சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி: நாமக்கல்லில் சோகம்!

 

மழைக்கு பயந்து ஒதுங்கிய இடத்தில் சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி: நாமக்கல்லில் சோகம்!

மழைக்கு ஒதுங்கியபோது சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உட்பட 2 பேர் உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்: மழைக்கு ஒதுங்கியபோது சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உட்பட 2 பேர் உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

rain

நாமக்கல்லில், திருச்சி ரோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையான தங்கம் மருத்துவமனை உள்ளது. மருத்துவமனையின்  சுவர் மீது விளம்பரப் பலகை ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது. இதன் அருகே  உணவகம் ஒன்று இயங்கி வந்துள்ளது.  இந்த உணவகத்தின் முன்பு நிழலுக்காக ஆஸ்பெட்டாஸ் ஷீட் போடப்பட்டு இருந்தது.

thanagm

இந்நிலையில்  நேற்று மாலை பலத்த காற்றுடன் நாமக்கல்லில் மழை பெய்தது.  உணவகத்தின் முன்பு நிழலுக்காகப்  போடப்பட்டு இருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட் கீழே சிலர் மழைக்காக ஒதுங்கினர். அப்போது பலத்த காற்றினால் சுவரின் மீது இருந்த விளம்பர பலகை சுவரோடு பெயர்த்துக் கொண்டு விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்குள்  சிலர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்  இதில்  நாமக்கல் கூட்டுறவு காலனியை சேர்ந்த மருத்துவர் கலா என்பவர்  பரிதாபமாக உயிரிழந்தார்.  இதேபோல் தங்கம் மருத்துவமனையின் ஓட்டுநர் மோகன்ராஜ், என்பவரும் பலியானார். 

hospital

மேலும் பாதிக்கப்பட்ட 5 பேருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தரமற்ற முறையில் நீளமான சுவர் எழுப்பிய மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் நடைபெற்றது என்று அப்பகுதிவாசிகள்  குற்றச்சாட்டியுள்ளனர். 

இதையும் வாசிக்க: 4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல்; அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!