மழைக்காலத்துக்கு இதமான வெங்காய பக்கோடா

மழைக்காலத்துக்கு இதமான வெங்காய பக்கோடா

கோடை முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது. காற்றும் , மழையும் சேரும் மாலை பொழுதில் சூடான வெங்காயப் பகோடா செய்யலாம். திடீர் விருந்தினர் வருகையிலும் மிக எளிமையாக 15 நிமிடத்தில் சூடான தேநீருடன் பரிமாற அருமையான ஸ்நாக்ஸ். 

onion pakoda

தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – பெரியது 3
கடலை மாவு – 250கிராம்
அரிசி மாவு – 50கிராம்
மிளகாய் தூள் – 3தேக்கரண்டி
சோடாஉப்பு – சிறிது
பெருங்காயம் – சிறிது
எண்ணெய் – 300மிலி
உப்பு -தேவையான அளவு

onion pakoda

செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில்  பொடியாக நறுக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் வெங்காயம் , கடலைமாவு,அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயம் ,சோடா உப்பு, உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும் உதிர்த்துப் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும். சுவையான, மொறுமொறுப்பான வெங்காயப் பக்கோடா  சூடான தேநீருடன் பரிமாற ரெடி.