மளிகை கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம்1 மணி வரை மட்டுமே திறக்க தமிழக அரசு அனுமதி!

 

மளிகை கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம்1 மணி வரை மட்டுமே திறக்க தமிழக அரசு அனுமதி!

கொரோனா வைரஸின் தீவிரத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திணறிவருகின்றனர். இருப்பினும் பால், மளிகை உள்ளிட்ட  அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செயல்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

Edappadi palanisamy

இந்நிலையில்  நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள்  காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.