மலாலாவை துப்பாக்கியால் சுட்ட தலீபான் தீவிரவாதி பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பினான்

 

மலாலாவை துப்பாக்கியால் சுட்ட தலீபான் தீவிரவாதி பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பினான்

மலாலாவை துப்பாக்கியால் சுட்ட தலீபான் தீவிரவாதி பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பித்துள்ளான்.

இஸ்லாமாபாத்: மலாலாவை துப்பாக்கியால் சுட்ட தலீபான் தீவிரவாதி பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பித்துள்ளான்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவை கடந்த 2012-ஆம் ஆண்டு தலீபான் தீவிரவாதி இஷானுல்லா இஷான் துப்பாக்கியால் சுட்டான். மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளியில் நடந்த தீவிரவாத தாக்குதலிலும் இஷானுக்கு தொடர்புள்ளது. அந்த தாக்குதலில் 132 அப்பாவி பள்ளிக் குழந்தைகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த நிலையில், தலீபான் தீவிரவாதி இஷானுல்லா இஷான் பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பித்துள்ளான்.

ttn

இதுதொடர்பாக ஆடியோ ஒன்றை அவன் வெளியிட்டுள்ளான். இந்த ஆடியோ பாகிஸ்தான் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாகிஸ்தான் சிறையில் இருந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதியே, தான் தப்பி விட்டதாகவும் 2017-ஆம் ஆண்டு தன்னை சரண் அடையுமாறு கூறியபோது அளித்த வாக்குறுதிகளை பாகிஸ்தான் பாதுகாப்பு படை நிறைவேற்ற தவறி விட்டதாகவும் இஷான் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளான். இந்த விவகாரம் பெருத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது.