மலர் வசிய முறையும் தெய்வங்களின் வழிபாடுகளும் 

 

மலர் வசிய முறையும் தெய்வங்களின் வழிபாடுகளும் 

மலர்களின் வழிபாட்டு முறைகளும் அதன் முக்கியத்துவங்களும் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்

பாண்டிசேரி ஸ்ரீ அன்னை வலியுறுத்திய வழிபாடுகளில் மிக முக்கியமானது மலர் வழிபாடு. அன்னைக்கு மலர்களின் மீது அளவற்ற விருப்பம் உண்டு. அதன் தூய்மை, புத்துணர்ச்சி, அழகு, சுயநலமின்மை ஆகியவற்றைப் பற்றி அவர் புகழ்ந்துரைத்திருக்கிறார்.

malar

அன்னைக்கு மலர்களின் மீது அளவற்ற விருப்பம் உண்டு.ஆசிரமத்தில் தானே ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் அழகான பல மலர்களை நட்டு தம் இறுதிக்காலம் வரை பராமரித்து வந்திருக்கிறார்.மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள் என்பது ஸ்ரீ அன்னையின் கருத்தாகும்.

 மலர்கள் என்றாலே மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.எல்லா மலர்களாலும் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைப்பது இல்லை.அந்தந்த பகுதியில் ஒரு சில மலர்கள் கிடைப்பது அரிதாக இருக்கும். கிடைக்கின்ற மலர்களின் மூலமாக பலதரப்பட்ட மக்கள் தங்கள் ஏழ்மைக்கு தகுந்தது போல் தேவையை அறிந்து மலர்களை ஆண்டவனுக்கு அணிவித்தால் ஏற்றமான மன நிம்மதியை தருவார் பூஜைக்கு உகந்த மலர்களை தரையில் வைக்கக்கூடாது.மேலும் காலில் மிதிபடக்கூடாது.

 

malarde

பூக்களில் மனோரஞ்சிதம்,மரிக்கொழுந்து,மருவு,மாசி,பச்சை,கஸ்தூரி,விருச்சி,செவ்வந்தி, ரோஜா,வில்வம்,தாமரை,மகிழம் பூ இவைகளில் தொழில் விருத்திக்கு உபயோகம் ஆகும் மலர்கள். செம்பருத்தி,அடுக்கி,அரளி இவைகளை அம்மன்,ஆஞ்சநேயர்,விநாயகர்,சுப்ரமணிய சுவாமி (முருகன்) புஷ்ப குணங்கள் புஷ்பங்களில் நான்கு வித குணங்கள் உண்டு.ஜாதகங்களில் முக்குண சாஸ்திரம் அறிந்து பூவின் நிறங்களை தேர்ந்தெடுத்து அவைகளை அணிவித்து வழிபாடு செய்யலாம். 

12 லக்னங்களில் மேஷம், ரிஷபம்,துலாம், விருச்சிகம், லக்னங்களுக்கு தாமச வேளைகளும் சாத்வீக வேளைகளும் பயன்படும்.மிதுனம்,சிம்மம்,கும்பம்,மகரம் லக்னங்களுக்கு இராட்சச வேளைகளும்,சாத்வீக வேளைகளும் உகந்தது.கன்னி,கடம், தனுசு,மீனம் லக்னங்களுக்கு தாமச வேளையும்,இராட்சச வேளையும் உகந்தது.

புஷ்பங்களில் புஷ்பகுணம் என்று இரகசிய வழிமுறை உள்ளது.சாதவீக இராட்சச,தாமச, மிஸ்ட்சரம் என்ற நான்கு வகைகள் உள்ளது வெண்மையான புஷ்பங்கள் சாத்வீக புஷ்பங்கள் சிவப்பு நிறமுடையவை இராட்சச புஷ்பங்கள். கருமை நிறமுடைய புஷ்பங்கள் மிஸ்ட்சர புஷ்பங்கள் பொன்மயமான புஷ்பங்கள் இரவில் பூஜிக்க சமர்ப்பிக்கத்தக்கவை. புஷ்பங்கள் கிடைக்காத சூழ்நிலையில் அதன் இலைகளை வைத்துக்கூட பூஜிக்கலாம்.

roseghj

குறிப்பு:

அர்ச்சதையால் விஷ்ணுவையும்,துளசியால் விநாயகரையும்,அருகம்புல்லால் தேவியையும்,வில்வத்தினால் சூரியனையும், ஊமத்தம் பூவினால்,எருக்கம் பூவினாலும்
விஷ்ணுவுக்கு பூஜிக்கலாகாது.

தொழில் விருத்திக்கு : செம்பருத்தி,அடுக்கு அரளி,தொத்திப்பூ

தெய்வ அருள் பெற: கருந்துளசி, மகிழம்பூ

செல்வம் பெற : செந்தாமரை 

சுகபோகம்  : மாசிப்பச்சை, மரிக்கொழுந்து  

மனசஞ்சலம் நீங்க: வெண்தாமரை,வெள்ளை நந்தியாவட்டை,மல்லிகை, இருவாச்சி போன்ற புஷ்பங்களினால் சந்திரனை வழிபட மனசஞ்சலம் நீங்கும்.

தரித்திரம் நீங்க: சங்கு, புஷ்பம், நீலகனகாம்பரம், சிவப்பு நிற அரளி ஆகியவற்றால் அம்மனை வழிபாடு செய்ய தரித்திரம் நீங்கும்.

கவலைகள் நீங்க: சிவப்பு அரளிப் பூக்களால் ஆஞ்சநேயர்,அம்மனை வழிபட கவலைகள் தீரும்.

தம்பதிகள் ஒற்றுமைக்கு : மனோரஞ்சிதம், மரிக்கொழுந்து இவைகளினால் ஈஸ்வரன், விநாயகரை வழிபட தம்பதிகளுக்கு ஒற்றுமை கிடைக்கும்.

ரோஜா : குறைகள் விலகும்.தடைகள் அகலும்.வெற்றி தரும்

மல்லிகை: சோதனைகள் நீங்கும்,  இன்பம் பெருகும்

துளசி : மனத்தூய்மை பெருகும். பக்தி சிறக்கும்

சாமந்தி : வலிமை, புது சக்தி உண்டாகும். பகைகள் விலகும்

செம்பரத்தை : தெய்வீக அன்பு கிடைக்கும்

நித்திய கல்யாணி : முன்னேற்றம் தரும்.

எருக்கம்பூ  : வல்லமை, தைரியம், மன உறுதி தரும்

செந்தாமரை  : தெம்பு, வலிமை, புத்துணர்ச்சி, உயர்வு தரும்

 

malarkiu

வெண்தாமரை     :   தெய்வீக உணர்வு மேம்படும். மன மாசுக்கள் அகலும்

காகிதப்பூ               :     பாதுகாப்பு உணர்வு மிகும்.

வாடாமல்லி           :    நோயற்ற தன்மை, ஆயுள் விருத்தி, ஆபத்துக்கள் விலகும்

செவ்வரளி             :      தவறுகள் விலகி,ஒழுங்குகள் ஏற்படும்

மரிக்கொழுந்து   : வெற்றியைத் தரும்

பவழ மல்லி          : நியாயமான ஆசைகள் நிறைவேறும்

நந்தியாவட்டை  :  புத்துணர்ச்சி தரும். மனத்தூய்மை உண்டாகும்.