மலக்குழியின் விஷவாயுவிலிருந்து தம்பியைக் காப்பற்ற அண்ணன் உயிரிழந்த சோகம் !

 

மலக்குழியின் விஷவாயுவிலிருந்து தம்பியைக் காப்பற்ற அண்ணன் உயிரிழந்த சோகம் !

கழிவு நீர்த் தொட்டியில் இறங்கியவுடன் ரஞ்சித் உள்ளேயே  மயங்கி விழுந்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் பிரபல வணிக வளாகத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக ரஞ்சித் குமார்,  அருண் குமார் உள்ளிட்ட 5 பேர் இன்று அதிகாலை சென்றுள்ளனர். அப்போது, ரஞ்சித் குமார் உள்ளே இறங்கியுள்ளார்.கழிவு நீர்த் தொட்டியில் இறங்கியவுடன் ரஞ்சித் உள்ளேயே  மயங்கி விழுந்துள்ளார்.

Ranjith

தனது தம்பி மயங்கி விட்டான் என்பதை அறிந்த அருண்குமார், ரஞ்சித்தைக் காப்பாற்றுவதற்காகக் கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்போது அவரை அதிலிருந்த விஷவாயு தாக்கியுள்ளது. ரஞ்சித்தை மேலே தூக்கிவிட்டு, விஷவாயு தாக்கியதால் அருண்குமார் அதனுள் விழுந்து உயிரிழந்துள்ளார். 

Arun

அவரை மேலே தூக்கி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அருண்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகுந்த உபகரணம் இல்லாமல் குழிக்குள் இறங்கியதால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது குறித்துப் பேசிய காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்களை பணியமர்த்திய நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இளைஞரின் உயிரிழப்புக்குக் காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.