மற்றொரு சாதாரண திங்கட்கிழமை காலையாக இன்று இருக்காது- ஆனந்த் மகிந்திரா….

 

மற்றொரு சாதாரண திங்கட்கிழமை காலையாக இன்று இருக்காது- ஆனந்த் மகிந்திரா….

மற்றொரு சாதாரண திங்கட்கிழமை காலையாக இன்று இருக்காது என காஷ்மீர் நிலவரம் தொடர்பாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா டிவிட் செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக கடந்த வாரம் உளவுத்துறை ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த மாநிலத்தில் கூடுதலாக 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். மேலும், அமர்நாத் யாத்திரை மேற்கொண்டவர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அம்மாநில அரசு அறிவித்தது.

ஆனந்த் மகிந்திரா

இதனையடுத்து அமர்நாத் யாத்திரை பாதியிலேயே முடித்து கொண்டு பக்தர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதற்கிடையே நேற்று  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் காஷ்மீர் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு துறை செயலாளர் உள்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டம் முடிவடைந்தபிறகு, நேற்று நள்ளிரவில் ஜம்மு காஷ்மீரில் ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, உஸ்மான் மஜித் போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஸ்ரீநகர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை, செல்போன் மற்றும் லேண்டு லைன் என அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீர் நிலவரம்

இந்நிலையில், மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். அதில், மற்றொரு திங்கட்கிழமை காலையாக இன்று இருக்காது. காஷ்மீர் நிலவரம் தொடர்பாக நாடே காத்திருக்கிறது. இப்போது உள்ள சூழ்நிலையில், அங்கு இருப்பவர்களின் ஒவ்வொவருவரின் பாதுகாப்பு மற்றும் விளைவுகள் நாட்டை வலுவாகவும் மற்றும் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கவும் மட்டுமே பிரார்த்தனை செய்ய முடியும் என ஆனந்த் மகிந்திரா டிவிட் செய்துள்ளார்.