மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய தொல்.திருமாவளவன் மனு தள்ளுபடி !

 

மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய தொல்.திருமாவளவன் மனு தள்ளுபடி !

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மறைமுக தேர்தலை ரத்து செய்யக் கோரி நேற்று பொது நல மனு ஒன்றை அளித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மறைமுக தேர்தலை ரத்து செய்யக் கோரி நேற்று பொது நல மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தலாம் என்று அரசியல் சாசனத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். சட்டத்திற்குப் புறம்பான இதனை ரத்து செய்து அந்த அனைத்து பதவிகளுக்கும் நேர்முகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

ttn

இன்று அந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள், மறைமுக தேர்தலுக்காகத் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது சட்ட விரோதமானது அல்ல என்று கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும், தன்னை குறிப்பிட்ட பதவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சட்டப் படியான உரிமை தான் என்றும் தேவைப்பட்டால் மனு தாரர் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.