மருந்தை அனுப்பவில்லை என்றால் பதிலடி…. இந்தியாவை மிரட்டும் டிரம்ப்

 

மருந்தை அனுப்பவில்லை என்றால் பதிலடி…. இந்தியாவை மிரட்டும் டிரம்ப்

மலேரிய எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் உருவான சீனாவை காட்டிலும் அமெரிக்கா அந்த தொற்று நோய்க்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரசுக்கு மருந்துக்கு கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் அந்நாடு தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இதற்கிடையே கொரோனா நோயாளிகளுக்கு மலேரிய எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்தி பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்ததாக தெரிகிறது.

பிரதமர் மோடி

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து இந்திய நிறுவனங்களிடம் உள்ளது. ஆனால் அந்த மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தற்சமயம் தடை விதித்துள்ளது. மேலும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸை குணப்படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்யும்படியும் ஆய்வாளர்களிடம் கேட்டுக்கொண்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க நிறுவனங்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கான ஆர்டரை இந்தியா அனுப்பாததால், அந்த மருந்தை உடனே அனுப்புமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் இப்போது வரை அந்நாட்டுக்கு மருந்து ஏற்றுமதி செய்யப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து பேசுகையில், இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து நன்றாக செயல்படுகிறது. அமெரிக்கா  கொடுத்த மருந்து ஆர்டரை இந்தியா நிறுத்தி வைத்தற்கான காரணம் தெரியவில்லை. இந்தியா மற்றும் அமெரிக்கா நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை  கொண்டுள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கவில்லை என்றால் பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.