மருத்துவ கல்லூரியில் ஊழல்: அன்புமணி மீது சிபிஐ தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

 

மருத்துவ கல்லூரியில் ஊழல்: அன்புமணி  மீது சிபிஐ தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அன்புமணி ராமதாஸ்  அமைச்சராக இருந்த போது  மருத்துவக்கல்லூரி விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

மருத்துவ கல்லூரியில் ஊழல்: அன்புமணி  மீது சிபிஐ தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

புதுடெல்லி:  அன்புமணி ராமதாஸ்  அமைச்சராக இருந்த போது  மருத்துவக்கல்லூரி விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

hc

பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி, இரண்டு மருத்துவக்கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மறுவிசாரணை தொடங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லி ரோஸ் அவன்யூ சி.பி.ஐ நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சில்  தனியார் மருத்துவ கல்லூரிகளைச் சோதனை செய்த போது எடுத்த ஆதாரங்களை வழங்க நீதிபதி அஜய் குமார் உத்தரவிட்டார். பின்பு இந்த வழக்கை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

 

இந்த விசாரணையின் போது  வழக்கில் தொடர்புடைய அன்புமணி உள்ளிட்ட ஆறு பேரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.