மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியுமா?- உயர்நீதிமன்றம் கேள்வி

 

மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியுமா?- உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் பெற்று, கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 மாணவர்களுக்காக அரசின் ஒவ்வொரு மருத்துவ கல்லூரிகளிலும் தலா 2 இடங்களை அதிகரிக்க முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவ இடங்களை அதிகரிக்க முடியுமா?- உயர்நீதிமன்றம் கேள்வி

7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் அடிப்படையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டிய வாய்ப்புக் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், அந்த வாய்ப்பினை நிராகரிக்க நேர்ந்த, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் இலக்கியா மற்றும் தர்ஷினி ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கச் செய்தால் மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றும், அரசு பள்ளி மாணவர்கள் மீதான சமூகத்தின் பார்வையை மாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முடிந்த பின் கிடைக்கும், 160 இடங்களில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், 12 இடங்கள் கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்தது. இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 17 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.