மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

 

மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

கோரிக்கைக்கு செவி சாய்த்த பேராயர் அங்கு புதைக்க அனுமதி அளித்ததன் பேரில், அங்கு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்த போது மருத்துவர் சைமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக, டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 19 ஆம் தேதி உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை கீழ்ப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது உடல்  வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

ttn

இதனையடுத்து மருத்துவர் சைமனின் மனைவி, மருத்துவரின் கடைசிக்கு ஆசையை நிறைவேற்றுமாறும் சைமனின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் கிறித்துவமுறைப்படி மறுஅடக்கம் செய்யுமாறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்தார். அப்போது ஒரு பெண் உட்பட 14 பேர், மருத்துவரின் உடலை அங்கு புதைக்க கூடாது என்று தாக்குதல் நடத்தினர். அதன் பின்னர், கோரிக்கைக்கு செவி சாய்த்த பேராயர் அங்கு புதைக்க அனுமதி அளித்ததன் பேரில், அங்கு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 14 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.