மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு வந்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார்! அடிபணிந்த அரசு

 

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு வந்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார்! அடிபணிந்த அரசு

போராட்டத்தை கைவிட்டு வந்தால் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

போராட்டத்தை கைவிட்டு வந்தால் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 7 வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற மாநிலங்களில் மருத்துவர்களுக்கு வழங்குவது போல் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மருத்துவர்கள் போராட்டம்

இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “மருத்துவர்கள் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. விழுப்புரம், கடலூர், திருப்பூர், நெல்லையில் மருத்துவர்கள் முழுமையாக பணிக்குத் திரும்பிவிட்டனர். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் இடங்களை காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும். புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2,160 அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். மொத்தம் 16,475 மருத்துவர்களில் 2,523 பேர் மட்டும் தான் இதுவரை கையெழுத்திடவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீதமுள்ள மருத்துவர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும். மருத்துவர்களுடன் துறை செயலரும், நானும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.போராட்டத்தை கைவிட்டு வந்தால் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்” எனக் கூறியுள்ளார்.