மரம் நாட்டால் இரண்டு மதிப்பெண்கள்: கல்வித்துறை அதிரடி; மாணவர்கள் உற்சாகம்!

 

மரம் நாட்டால் இரண்டு மதிப்பெண்கள்: கல்வித்துறை அதிரடி; மாணவர்கள் உற்சாகம்!

மாணவ மாணவியர்கள் மரக்கன்று நட்டால் 2 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை: மாணவ மாணவியர்கள் மரக்கன்று நட்டால் 2 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பள்ளி மாணவ மாணவிகளை வெளிநாட்டிற்கு அனுப்பி அந்நாட்டு தொழில்நுட்பங்கள் குறித்து கற்பிக்கப்படும் என செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் அறிவியலில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு பள்ளிக்கல்வி துறை சார்பாக 10 நாள் கல்வி சுற்றுலாவிற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்

இதையடுத்து நேற்று நாடு திரும்பிய மாணவர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துரையாடி பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை வாயிலாக மாணவர்களை மேலைநாடுகளுக்கு அனுப்புவதற்கான பணிகளை 3 கோடி ரூபாய் செலவில் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். மரக் கன்றுகளை நட்டால் மாணவ-மாணவிகளுக்கு 2 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.