மரண கால்குலேட்டர்… மருத்துவர்களின் புதிய சாதனை!

 

மரண கால்குலேட்டர்… மருத்துவர்களின் புதிய சாதனை!

மனிதர்களின் விஞ்ஞான அறிவு விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சியை மக்கள் முழு அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியினால், நம்முடைய பாரம்பரிய உணவு, பழக்க வழக்கங்கள் போன்றவைகளை எல்லாம் மறந்து விட்டோம். நம்முடைய  ஆரோக்கியமான உணவு முறைகளை மறந்து விட்டு பாஸ்ட் புட் கலாச்சாரம்

மனிதர்களின் விஞ்ஞான அறிவு விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சியை மக்கள் முழு அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியினால், நம்முடைய பாரம்பரிய உணவு, பழக்க வழக்கங்கள் போன்றவைகளை எல்லாம் மறந்து விட்டோம். நம்முடைய  ஆரோக்கியமான உணவு முறைகளை மறந்து விட்டு பாஸ்ட் புட் கலாச்சாரம், முறையற்ற உணவு பழக்கங்கள், லாகிரி வஸ்துக்கள் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி இன்று இளம் வயதிலேயே சர்க்கரை நோய், இதய பிரச்சனை, கிட்னி பாதிப்பு, மாரடைப்பு  போன்றவைகளாள் ஒரு தலைமுறையே பெரும் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. 

calculator

இந்த நிலையை மாற்றி, ஆரோக்கியத்தை மீட்டெடுக்க அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் புதிதாக மரண கால்குலேட்டர் ஒன்றை கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார்கள்.  இந்த  மரண கால்குலேட்டர் மனித உடலில் உள்ள அத்தனை பிரச்னைகளையும் ஆராய்கிறது. சர்க்கரை, ரத்த பரிசோதனை என அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டு உடலுக்குத் தேவையான முறையான உணவு முறைகளைப் பரிந்துரைச் செய்கிறது. இது தவிர அவர்களின் வாழ்க்கை வடிவமைப்பு குறித்த போதனைகளையும் வழங்குகிறது. இது மக்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தின் மீதான விழிப்புணர்வாக அமைய வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம் என்கிறார்கள் மருத்துவர்கள்.