மரங்களை சேதப்படுத்தினால் ரூ.25,000 அபராதம்! 10 நாட்களில் சென்னை மாறுகிறது!  

மரங்களை சேதப்படுத்தினால் ரூ.25,000 அபராதம்! 10 நாட்களில் சென்னை மாறுகிறது!  

சென்னை மாநகரத்தில் இருக்கும் மரங்களில் தேவையற்ற பொருட்களை அமைப்பவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். 3 ஆண்டு வரையில் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை மாநகரத்தில் இருக்கும் மரங்களில் தேவையற்ற பொருட்களை அமைப்பவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். 3 ஆண்டு வரையில் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

add in tree

சென்னை மாநகராட்சியில், சென்னை பெருநகர் உட்பட்ட பகுதிகளில் பசுமை பரப்பளவை அதிகரிக்க சென்னை மாநகராட்சி தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சென்னை நகரின் பெரும்பாலான சாலைகள் மற்றும் உட்புற தெருக்களில் மரங்கள், மரக்கன்றுகள் முதலியவை நடப்பட்டு மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தனியார் அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், அவர்களது விளம்பரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக,  மரங்களில் விளம்பர பலகைகளை ஆணி வைத்து அடித்தும், கட்டித் தொங்க விட்டும் பல்வேறு விதமாக மரங்களை சேதப்படுத்தி வருகிறார்கள். 
சில நிறுவன உரிமையாளர்கள், தங்கள் நிறுவனத்தை தனித்துவமாக காண்பிக்க மரங்களில் பெயிண்ட் அடிப்பது, வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிப்பது, ஓயர்கள் மூலம் சுற்றிக் கொள்வது என பல்வேறு விதமாக  மரங்களை பயன்படுத்துகின்றன. 

add

இதுபோன்ற தேவையற்ற விளம்பரங்கள் மூலம் மரங்கள் பட்டு போவதுடன், அதன் ஆயுட்காலமும் குறைந்து போகின்றன. மேலும், சென்னை மாநகராட்சி அழகு மாறுவதாவும் மாநகராட்சி கருதுகின்றது. எனவேதான், இந்த மாதிரியான  சம்பவங்களில் ஈடுபடுவர்களை தண்டிக்க, சென்னை மாநகராட்சி 25,000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை நிறுவனங்கள் 10  நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளது.