மயிலாடுதுறை துலா கட்டத்தில் நடைபெறும் அந்திம புஷ்கர விழா 

 

மயிலாடுதுறை துலா கட்டத்தில் நடைபெறும் அந்திம புஷ்கர விழா 

மயிலாடுதுறை துலா கட்டத்தில் அந்திம புஷ்கர விழா வருகின்ற 8 ஆம் தேதி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நதியினை ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது.அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் குருபெயர்ச்சியின் பொழுது ஒவ்வொரு நதிகளை சிறப்பிப்பது வழக்கமாகும்.கடந்த ஆண்டு மயிலாடுதுறை ஆற்றில் காவிரி புஷ்கர விழா கொண்டாடப்பட்டது.

mailaduthurai

குரு பெயர்ச்சி ஆரம்பித்து முதல் 12 நாட்கள் ஆதி புஷ்கரம் என்றும் அடுத்த குரு பெயர்ச்சிக்கு முன்புள்ள 12 நாட்கள் அந்திம புஷ்கரம் என்றும் கொண்டாடப்படுகிறது.சென்ற வருடம் துலாம் ராசிக்கு அதிபதியான காவிரியில் ஆதி புஷ்கரமானது 12-09-2017 முதல் 24-09-2017 வரை 12 நாட்கள் மயிலாடுதுறை துலா கட்டத்தில் கொண்டாடப்பட்டது.அதே போல இந்தாண்டிற்கான ஆதி புஷ்கர விழா நேற்று 30-09-2018 முதல் 11-10-2018 வரை 12 நாட்கள் தாமிரபரணியில்  கொண்டாடப்படவுள்ளது.

 

mahapushkarani

மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரியில் அந்திம புஷ்கர விழா 8-10-2018 மற்றும் 09-10-2018 ஆகிய தேதிகளில் வேதபாராயணத்துடன் சிறப்பு பூஜையுடன் கொண்டாட பல்வேறு இந்து அமைப்புகளும் மற்றும் மடாதிபதிகளும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்பதால் அதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்புகளும் மடாதிபதிகளும் செய்துவருகின்றனர்.