மன்மோகன் சிங்கிற்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

 

மன்மோகன் சிங்கிற்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி உட்பட ஏராளமான தலைவர்கள்  தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் திமுகவின் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

பல்வேறு காலங்களில் வலுவான வளர்ச்சி சார்ந்த பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க அவர் மேற்கொண்ட பணிகள் அவருடைய தெளிவான பார்வையையும், நிர்வாகத் திறமையையும் எடுத்துக் காட்டுவதோடு, இந்திய வரலாற்றில் பெருமைக்குரிய இடத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது என பதிவிட்டு இருக்கிறார்.