மன்னிப்புக் கேட்கமாட்டார் கமல்….ம.நீ.மய்ய துணைத் தலைவர் அறிக்கை…

 

மன்னிப்புக் கேட்கமாட்டார் கமல்….ம.நீ.மய்ய துணைத் தலைவர் அறிக்கை…

’சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்று கமல் கூறிய கருத்துக்கு அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில் அப்படி ஒரு எண்ணமே தனக்கு இல்லை என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார் கமல்.

சென்னை: ’சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்று கமல் கூறிய கருத்துக்கு அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில் அப்படி ஒரு எண்ணமே தனக்கு இல்லை என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார் கமல்.

kamal

இன்று சற்றுமுன்னர் ம.நீ.மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் கமல் பேசிய பேச்சுக்கு விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,…’சமீபத்தில் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் ஆற்றிய உரையினை பிரிவினையை தூண்டுகின்ற சில அரசியல் அமைப்புகள் முற்றிலுமாக திரித்தும், திசை மாற்றியும் வி‌ஷம பிரசாரம் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் கருத்தினை இந்துக்களுக்கு எதிரான கருத்தாக கட்டமைத்து அதன் மூலமாக தங்களின் பொய் பிரசாரத்திற்கு வலு ஏற்றிடத் துடிக்கின்ற சில வி‌ஷமிகள் புரட்டு வாதத்தினை பரப்பி வருகின்றனர்.

kamal

கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பேசும்போது தீவிரவாதம் எந்த மதத்தினாலும் எந்த வடிவில் முன்னெடுக்கப்பட்டாலும் அது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவித்திருந்தார்.அவரது உரையில்  ஒவ்வொரு குடிமகனும் ஒருங்கிணைந்தும் ஒன்றிணைந்தும் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சமூகமாக இருந்திட வேண்டும் என்கிற தன்னுடைய எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தி பேசி உள்ளார்.

kamal

அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இந்தியர் என்கிற ஒருமைப்பாட்டு உணர்வுடன் தொடர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு, மக்களின் பேராதரவோடு நடைபோட்டு கொண்டிருக்கின்ற மக்கள் நீதி மய்யம் கட்சி இக்கருத்தினை வலியுறுத்தி மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து கொண்டே இருக்கும்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தனது இந்த நிலைப்பாட்டினை உறுதி செய்திடும் வகையில் தொடர்ந்து தனது கருத்துக்களை வலியுறுத்தி கொண்டே இருக்கும். மக்கள் நீதி மய்யம் நீதிமன்றங்கள் மீதும், சட்டத்தின் மீதும் பெரும் மரியாதையும், மதிப்பும் கொண்டுள்ளது’ என்று மட்டுமே மகேந்திரன் தனது அறிக்கையில் கூறி உள்ளார் என்பதால் கமல் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கும் எண்ணத்தில் இல்லை என்பது உறுதியாகிறது.