‘மனைவி திருந்தி வாழ கோயிலுக்கு சென்ற கணவன்…’ போன் போட்டு கள்ளகாதலனிடம் போட்டு கொடுத்த மனைவி; கடைசியில் நடந்த விபரீதம்!

 

‘மனைவி திருந்தி வாழ கோயிலுக்கு சென்ற கணவன்…’ போன் போட்டு  கள்ளகாதலனிடம் போட்டு கொடுத்த மனைவி; கடைசியில் நடந்த விபரீதம்!

உன் மனதை மாற்றி நீ திருந்தி வாழவேண்டும் என்று திருத்தணி முருகன் கோயிலுக்கு போய்  வேண்டி கொள்ள போகிறேன்

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் மெக்கானிக் ராஜேந்திரன். இவர் கடந்த 29-ம் தேதி சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலிலிருந்து அரக்கோணம் அருகே  தவறி விழுந்ததாக அரக்கோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், ‘திருத்தணி முருகன் கோயிலுக்குச் செல்ல கடந்த 29-ம் தேதி மதியம், மின்சார ரயிலில் ஆவடி அருகே ஏறினேன். அப்போது ரயில் காட்டு ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, முகமூடி அணிந்திருந்த மூவர் என்னை ரயிலிலிருந்து தள்ளிவிட்டனர். எனக்கும், எனது மனைவி அஸ்வினிக்கும்  இடையே தகராறு உள்ளது. இதனால் என் மனைவி என்னை கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என்று  கூறியுள்ளார். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ttn

இதுகுறித்து அஸ்வினியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன. அதில்,  அஸ்வினிக்கும் அவரது நண்பர் அனுராக் என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு  ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கடவுள் உன் மனதை மாற்றி நீ திருந்தி வாழவேண்டும் என்று திருத்தணி முருகன் கோயிலுக்கு போய்  வேண்டி கொள்ள போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து அஸ்வினி கள்ளக்காதலனுக்குத் தகவல் சொல்ல, அவர்கள் திட்டமிட்டு ராஜேந்திரனை கொல்ல  முயற்சி செய்துள்ளனர். ரயிலில் இருந்து தள்ளிவிட்டு விபத்து என்பது போல சித்தரித்துவிடலாம் என திட்டம்தீட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.  இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அப்போது  ரயில் மெதுவாக சென்றதால், கீழே விழுந்ததில் ராஜேந்திரன் உயிருக்கு ஆபத்தில்லாமல் படுகாயங்களுடன் தப்பியுள்ளார். 

ttn

இந்நிலையில் ராஜேந்திரன் மனைவி அஸ்வினி,  அவரது ஆண் நண்பர் அனுராக், கமலேஸ்வரன், தினேஷ் ஆகிய 4 பேரைபோலீசார்  கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.