மனதை மயக்கும் கத்திரிக்காய் முருங்கைக்காய் புளிக்கூட்டு

 

மனதை மயக்கும் கத்திரிக்காய் முருங்கைக்காய் புளிக்கூட்டு

தயிர்சாதம், புளியோதரை போன்ற கட்டுசாதங்களுக்கு நல்ல பொருத்தமான சைடு டிஷ். இந்தக் கூட்டை அப்படியே சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்

தயிர்சாதம், புளியோதரை போன்ற கட்டுசாதங்களுக்கு நல்ல பொருத்தமான சைடு டிஷ். இந்தக் கூட்டை அப்படியே சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்:

பிஞ்சு கத்திரிக்காய்: 200கி
முருங்கைக்காய்: 1
சின்ன வெங்காயம்: 50 கி(பொடியாக நறுக்கிய)
தக்காளி: 1(பொடியாக நறுக்கிய)
புளிக்கரைசல்: 100மி
சாம்பார் தூள்: 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள்: 1 டீஸ்பூன்
தனியாத்தூள்: 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்: 1 டீஸ்பூன்
உளுந்து: 1 டீஸ்பூன்
கடுகு: 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை: சிறிதளவு
கொத்தமல்லி: சிறிதளவு
நல்லெண்ணெய்: 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு சிறிது வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
பிறகு நறுக்கிய கத்திரிக்காயை மற்றும் முருங்கைக்காய் போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள்;சாம்பார் தூள்; மிளகாய்த்தூள்; தனியாத்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

அதில் புளிக்கரைசலை சேர்க்கவும்.தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
நன்றாக கெட்டிப்பதம் வந்தவுடன் மீதமுள்ள ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.
இறுதியில் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.