மனதை அடக்கி ஆள்வதற்கு ரமணர் உபதேசித்த மந்திரம்! முயற்சி செய்து பாருங்க!

மனதை அடக்கி ஆள்வதற்கு ரமணர் உபதேசித்த மந்திரம்! முயற்சி செய்து பாருங்க!

பகவான் ரமணரிடம் அவரது சீடர்களுள் ள் ஒருவர் ஒரு முறை, “பகவானே! மனம் தான் என் அனைத்து துன்பங்களுக்கும் காரணம். மனமே பிறவிக்கு வித்து, மனம் ஒழிந்தால் அதுவே முக்தி. இது எனக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் மனம் சும்மா இருக்க மாட்டேன் என்றே சொல்கிறது. மனம் தானே அடங்க ஏதேனும் உபாயம் உண்டா என்று எனக்கு அருள வேண்டும்!” என்று கேட்டார். 

அது சரி… நாமும் கூட சில நிமிடங்கள் தியானம் செய்யலாம் என்று யோசித்து கண்களை மூடிக் கொண்டால், கோயிலுக்கு வெளியே விட்டு வைத்திருக்கும் செருப்பு பத்திரமாக இருக்குமா? என்று தானே நமது கவனம் செல்கிறது. அதைப் போலவே அந்த சீடரும் ரமணரிடம் மனதை அடக்குவதற்கு ஒரு உபாயம் கேட்டார்.

ramar

ரமணர் சீடரின் கேள்விக்கு அன்று எந்த பதிலையும் சொல்லவில்லை. சில நாட்கள் சென்றன. ரமணரின் அறையில் அணில் ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றது. ஆனால் அம்மா அணிலை பூனை அடித்துக் கொன்று விட்டது. எனவே பகவான் அந்த அணில் குட்டிகளை ஒரு ஓலை பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தார். சில நாட்களில் அணில்களுக்கு கால்கள் முளைத்து விட்டது. அங்குமிங்குமாக ஓடத் துவங்கின.  பகவான் ஒன்றை பிடித்து பெட்டியில் அடைத்தால் மற்றொன்று வெளியே ஓடும். இவ்வாறே அன்று முழுவதும் நடந்தது. பகவானுக்கு அந்த சீடரும் உதவினார். அந்த சீடரை பார்த்து பகவான், “அதோ பார்த்தாயா! தன் அம்மாவை அடித்த பூனை தன்னையும் அடித்து விடும் என்ற பயம் இல்லாததால் இந்த அணில் வெளியே ஓட ஆசைப் படுகிறது. பூனை, இது தான் பிரச்சனை என்று அறிந்து பயம் வந்து விட்டால் ஓடவே ஓடாது அல்லவா! அதைப் போலத் தான் நம் மனமும்.  உலகம் உண்மை என்ற மயக்கத்தில் உள்ள மணம், உலக ஆசைகளின் பொருட்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருக்கும். நாம் தான் சிறிது சிரமப்பட்டு அமைதியாக வைத்துப் பழக வேண்டும். இயக்கம் நம்முடையது அல்ல,  உலகம் உண்மையல்ல  என்று தெரிந்துக் கொண்டால் மனம் தானே அடங்கும்.  அதுவரை நாம் தான் முயற்சியால் மனதை கட்டுப்படுத்த வேண்டும்!” என்றார்.