மத உணர்வுகளை புண்படுத்திய செக்ஸ் டாக்டரை அடித்து துவைத்த பஜ்ரங் தள் அமைப்பினர்

 

மத உணர்வுகளை புண்படுத்திய செக்ஸ் டாக்டரை அடித்து துவைத்த பஜ்ரங் தள் அமைப்பினர்

ஒடிசாவில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் போஸ்டர் அடித்த செக்ஸ் டாக்டரை அடித்து, தெருவில் பொதுமக்கள் முன்னிலையில் பஜ்ரங் தள் அமைப்பினர் மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ளது ஜஹரிகன் நகரம். இந்நகரத்தில் சித்தா டாக்டரான பாவ்டோஷ் மொண்டோல் கடந்த சில மாதங்களுக்கு முன் கிளினிக் ஒன்றை தொடங்கினார். பாலியல் தொடர்பான நோய்களுக்கு அவர் சிகிச்சை அளித்து வருகிறார். அவர் தனது கிளினிக்கை விளம்பரப்படுத்தும் நோக்கில் அண்மையில் போஸ்டர் அடித்து நகரத்தின் முக்கிய சுவர்களில் ஒட்டியிருந்தார்.

பஜ்ரங் தள்

அந்த போஸ்டரில் இந்துக்களின் கடவுள் மற்றும் தெய்வங்களான ராதா-கிருஷ்ணன் படங்களை பயன்படுத்தி இருந்தார். இது அந்த பகுதி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியது. மேலும் அந்த போஸ்டர் அந்த பகுதியில் உள்ள பஜ்ரங் தள் அமைப்பினருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாவ்டோஷக்கு பாடம் கற்பிக்க பஜ்ரங் தள் அமைப்பினர் முடிவு செய்தனர்.

பஜ்ரங் தள் அமைப்பு

இதனையடுத்து பாவ்டோஷின் கிளினிக்கு சென்ற அவர்கள் அங்கு  இருந்த பாவ்டோஷ்வை அடித்து தெருவுக்கு இழுத்து வந்தனர். மேலும் பொதுமக்களின் முன்னிலையில் மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்தினர். இந்த சம்பவம் முழுவதும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதேசமயம் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.