மத்யாஷ்டமி தினத்தின் முக்கியத்துவங்களும் அதன் பலன்களும் 

 

மத்யாஷ்டமி தினத்தின் முக்கியத்துவங்களும் அதன் பலன்களும் 

மகாளய பட்சத்தின் முக்கிய நாளான மத்யாஷ்டமி தினத்தில் தர்ப்பணம் செய்வதால் சமயோஜித புத்தி அதிகமாகும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கையாகும்.

மகாளய பட்சத்தின் எட்டாம் நாளான நாளை வரும் அஷ்டமி தினத்தை மத்யாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.இந்த மத்யாஷ்டமி தினத்தில் நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம்  நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான சமயோசித புத்தி மற்றும் அறிவாற்றல் அதிகமாகும் என்று நம் ஜோதிட சாஸ்திரங்களில் 
கூறப்பட்டுள்ளது.

mahalaya

புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் என்று அர்த்தம்.மறைந்த நம் முன்னோர்கள்  பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. 

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும்.ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும்,வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும்,அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.

mahakal

கடக்க முடியாத காட்டாற்று வெள்ளத்திலும் கிடைக்கும் மரக்கலன்போல பித்ருக்களின் ஆசி அமையும்.எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும்.மஹாளய அமாவாசையை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி பிரதமை திதியில் இருந்தே பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் தொடங்கிவிட்டனர்.

mahalaaya

எனவே,மத்யாஷ்டமி என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.