மத்திய பிரதேச மருத்துவமனையில் பாம்பு கடிக்கு மாந்திரீக பூஜை! வெளியான வீடியோவால் சர்ச்சை

 

மத்திய பிரதேச மருத்துவமனையில் பாம்பு கடிக்கு மாந்திரீக பூஜை! வெளியான வீடியோவால் சர்ச்சை

மத்திய பிரதேச மருத்துவமனையில் பாம்பு கடித்த நபருக்கு மாந்திரீக பூஜை செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் ஷியாபூர் மாவட்டத்தில் ஒருவரை பாம்பு கடித்து விட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சிலர் பாம்பு கடிக்கு மாந்திரீக பூஜை  செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து மாந்திரீக பூஜை செய்யும் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பின் மாந்திரீகவாதி பாம்பு கடித்தவருக்கு மாந்திரீகம் செய்தார்.

பாம்பு

இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த யாரோ ஒருவர் அதனை இணையதளத்தில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது. அந்த வீடியோவில் மருத்துவமனையின் டாக்டர்கள் அல்லது உதவியாளர்கள் யாரும் இல்லை. முதலில் சம்பவத்தை மறுத்த  தலைமை மருத்துவ அதிகாரி பின்பு இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மாந்திரீக  பூஜை

நிலவுக்கு சாட்டிலைட் அனுப்பும் இந்த காலத்திலும் மத்திய பிரதேச மக்கள் மாந்திரீகம் மற்றும் சூனியம் மீது நம்பிக்கை வைத்து இருப்பது இன்னும் மூடபழக்க வழக்கங்களிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. மேலும், அரசு மருத்துவமனை நிர்வாகம் எப்படி தனது வளாகத்துக்குள் மாந்திரீக நடைமுறைகளை செய்ய விட்டது என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.